மக்கள் ஆணையொன்றின் ஊடாகவே தாம் ஆட்சிக்கு வர விரும்புவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலைக்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வினை காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தாம் அமைச்சுப் பதவியையோ, வேறு எதனையுமோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
மக்கள் ஆணையுடனேயே புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்தார்.