வாதுவ மகாவிஹார வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து முன்னாள் பாடசாலை கிரிக்கெட் நடுவரின் சிதைந்த நிலையில் சடலம் இன்று (27) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் வாதுவ மகாவிஹார வீதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த சாந்த சித்ரல் சல்காடு என்ற 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீட்டினுள் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்இ குறித்த நபல் வீட்டின் அறையொன்றில் உள்ள கட்டிலில் சடலமாக கிடப்பதை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்இ அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.