Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
அரசியல்இடைக்கால அரசாங்கம் : ஜனாதிபதி பிரதமர் சாதகமான பதில்

இடைக்கால அரசாங்கம் : ஜனாதிபதி பிரதமர் சாதகமான பதில்

நாட்டில் தற்போது இருக்கின்ற அமைச்சரவையை கலைத்து புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் சாதகமான பதிலை வழங்கி இருப்பதாக விமல் வீரவன்ச செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை நியமித்தால் நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திர நிலைக்கு கொண்டு வர முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அப்படி ஒரு அரசாங்கம் நியமிக்கப்படுமாக இருந்தால் பிரதமர் பதவியிலும் மாற்றம் ஏற்படும் எனினும் யார் பிரதமர் என்ற விடயம் குறித்து இன்னும் யாரும் கலந்துரையாட வில்லை என அவர் குறிப்பிட்டார்.

நேற்று ஜனாதிபதி அழைத்து இதுகுறித்து தங்களுடன் கலந்துரையாடியதுடன், இன்று காலை பிரதமரை சந்தித்து பேசியதாகவும் விமல் வீரவன்ச கூறினார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles