“சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றில், “சமூக வலைத்தளங்கள் தடுக்கப்பட்டாலும், நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN போன்றவை ஊடாக அவற்றை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்,
அத்தகைய தடைகள் முற்றிலும் பயனற்றவை.
அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.