இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை நடத்தியது.
இந்த தேடுதல் நடவடிக்கையின்போது சில இடங்களிலிருந்து தங்கம் மற்றும் ஆவணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சிப்பதாக இந்தியத் தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவர் இந்தியத் தேசிய புலனாய்வுப் பிரிவினரால் (NIA) கைதுசெய்யப்பட்டார்.
இந்திய-இலங்கை சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக மோசடியுடன் தொடர்புடைய கும்பலுடன் இவர் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.