ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (01) மாலை 4.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.