மிரிஹான போராட்டத்தின் போது ஜனாதிபதி மிகவும் பொறுமையாக செயற்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், போராட்டக்காரர்களுக்கு அமைதியாக போராட்டத்தை நடத்த அனுமதியளிக்குமாறும், காவல்துறை மற்றும் இராணவத்தினரை அதில் தலையிடாமல் இருக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
அதிகாலை 2 மணி வரை போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் தனியார் மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதியில் போராட்டக்காரர்களை கலைக்க ஜனாதிபதி குறைந்தபட்ச பலத்தையே பயன்படுத்தியதாகவும், அதற்கமைய, அரை மணி நேரத்திற்குள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.