ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக்கை அறைந்தமைக்காக வில் ஸ்மித்தை கைது செய்ய லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை தயாராகி வருவதாக ஒஸ்கார் தயாரிப்பாளர் வில் பெக்கர் தெரிவித்தார்.
எனினும் வில் ஸ்மித் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கிறிஸ் ரொக் தயக்கம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், தனது மனைவியை கேலி செய்ததற்காக வில் ஸ்மித், கிறிஸ் ரொக்கை மேடையில் அறைந்தார்.
இந்நிலையில், கிறிஸ் ரொக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தயங்கினாலும், ஒஸ்கார் ஏற்பாட்டுக் குழு வில் ஸ்மித் மீது ஏப்ரல் 18 ஆம் திகதி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(ரொய்ட்டர்ஸ்)