முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைந்ததுடன், ரணில் விக்ரமசிங்க கட்சியின் கொள்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாங்கள் கோட்டாபயவை ஜனாதிபதியாக்கினோம். எதுவானாலும் நேரடியாகச் செயற்படும் மற்றும் தகுந்த முடிவுகளை எடுக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று நம்பினோம். ஆனால் அவர் நேரடியான முடிவுகளை எடுக்கவில்லை. இதன் விளைவாக, அவர் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டியிருந்தது. நாங்கள் எதிர்பார்த்த ஆட்சியை அவரால் நடத்த முடியவில்லை. அதனால்தான் ரணிலை ஜனாதிபதியாக்கினோம் என்றார்.