அரசியல் அனுபவமற்ற கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை நாம் இழைத்த மிகப்பெரிய தவறாகும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன பண்டாரகம அலுவலகத்தை நேற்று (26) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில,
நாம் ஒரு இடத்தில் தவறிவிட்டோம். நான் அதை அன்று சொன்னே, இன்றும் சொல்கிறேன்.இதுவரை அரசியல் அனுபவம் இல்லாத கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது தவறாகும். அந்தத் தவறுக்குப் பிறகு கட்சிக்குள் சுயவிமர்சனத்துக்குச் சென்று மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம்.
அரசியல் செய்யாத ஒருவரை இனி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதற்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம். வரிசைகள் போய்விட்டன. மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. பொருட்களின் விலைகள் குறைந்து வருகின்றன. இன்று நாடு ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றார்.