விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”.
இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் . அந்த புகைப்படத்தில் சமந்தாவுக்கு நயன்தாரா கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CbwWsidvDjh/?utm_source=ig_embed&utm_campaign=loading