கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரேமலால் ஜயசேகர அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2020 ஜீலை மாதம் 31ம் திகதி தேர்தல் காலப்பகுதியில் இரத்தினபுரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 2 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ப்ரேமலால் ஜெயசேகர, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜெயசிங்க, முன்னாள் கஹவத்தை பிரதேச சபை தவிசாளர் வஜிர தர்சன் ஆகியோருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதற்கு எதிராக அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் அவர்களது தண்டனைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.