முன்னாள் அமைச்சர் அத்தாவுத செனேவிரத்ன காலமானார்.
91 வயதான அவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று (31) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
லங்கா சமசமாஜ கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஊடாக அவர் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.