Friday, January 30, 2026
23.4 C
Colombo
அரசியல்யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய?

யோஷிதவின் தேர்தல் பயணத்தை தடுத்த கோட்டாபய?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கையால் அது நடக்கவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் முன்னணியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதுளையில் டிலான் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்தார். யோஷிதவையும் பதுளையில் களமிறக்க திட்டமிட்டார்கள்.

அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவும் குழப்பத்தில் இருந்தார். யோஷிதவை களமிறக்கவுள்ளோம் என டலஸ் கோட்டாபயவிடம் கூறிய போது அந்த முட்டாள் வேலையை செய்துவிடாதீர்கள் என கோட்டாபய கூறியிருந்தார்.

அப்படி செய்தால் ஆடை அணிந்து வீதியில் செல்ல முடியாமல் போய்விடும் என கோட்டாபய குறிப்பிட்டார்.

எப்படியோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கோட்டாபய அதனை தடுத்து நிறுத்தி விட்டார் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles