மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
பண்டாரவளையில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டதற்காக வெலிமடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
வெலிமடையில் தாம் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வு எதுவும் இல்லை எனவும் அது தவறான தகவல் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.