யூடியூப் விதிமுறைகளை மீறியதாக இர்ஃபானின் சேனல் யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உணவு விமர்சகரான இர்ஃபான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறிய முதல் பெரிய உணவகங்களில் உள்ள உணவுகளை விமர்சித்து காணொளிகளை பதிவிட்டு வந்தார்.
அண்மையில், அவர் சாப்பிட்டு நன்றாக இருப்பதாக கூறிய உணவகமொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் முந்தைய நாள் சமைத்த பிரியாணியை சூடாக்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியமை தெரியவந்தது.
இந்நிலையில், யூடியூப் விதிமுறைகளை மீறியதாக இர்ஃபானின் சேனல் யூடியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது.
எனினும், இர்ஃபானின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இர்ஃபான், “யூடியூப் நமது சேனலை முடக்கியதற்கான காரணம் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையை முடிந்தவரை சரிசெய்ய முயல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.