Wednesday, April 23, 2025
26 C
Colombo
அரசியல்புத்தாண்டுக்கு பின் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம்?

புத்தாண்டுக்கு பின் நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம்?

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற ஆசன ஒதுக்கத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜயவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நாட்டில் நிலவும் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய இயலுமை அவருக்கு இருக்கிறது என மக்கள் நம்புவதன் காரணமாகவே இந்த வதந்திகள் பரவுகின்றன.

எவ்வாறாயினும் புத்தாண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற ஆசனங்களில் பாரிய மாற்றம் ஒன்று நிகழும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles