Sunday, August 10, 2025
27.8 C
Colombo
அரசியல்ஜனாதிபதிக்கு SHUT UP AND SIT DOWN என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

ஜனாதிபதிக்கு SHUT UP AND SIT DOWN என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும் ஒத்திவைக்கவும் கூட்டு உபாயங்களை முன்னெடுத்த ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றம் தக்க பதிலை வழங்கியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே ஆகும்.

அதனை பெற்றுக் கொள்ள மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், எதிர்காலத்திலும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தொடர்ந்தும் முன் நிற்போம்.

வங்குரோத்தான நாட்டில் பொருளாதாரத்தை சுருக்கி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய இயலுமை கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles