Saturday, September 21, 2024
28 C
Colombo
சினிமாஞானவேல்ராஜா மீது வழக்கு தொடர்ந்தார் சிவகார்த்திகேயன்

ஞானவேல்ராஜா மீது வழக்கு தொடர்ந்தார் சிவகார்த்திகேயன்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தமைக்கான சம்பள பாக்கியை தரக்கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், 4 கோடி ரூபா சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிப்பதற்காக தனக்கு 15 கோடி ரூபா சம்பளம் என நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா 11 கோடி ரூபா மட்டுமே வழங்கியதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு அளித்த 11 கோடி ரூபா வேதனத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கு மீதமுள்ள சம்பள பாக்கியை அளிக்கும்வரை ஞானவேல் ராஜா விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்குமாறும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles