Thursday, January 16, 2025
24.2 C
Colombo
ஏனையவைஇலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவு

இலங்கையின் அபிவிருத்தி சீர்திருத்த வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரேஸர் இதனைத் தெரிவித்தார்.

மேம்பாட்டுக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப உதவியை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பாக மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வங்கியின் அபிவிருத்திக் கொள்கை செயற்பாட்டுத் திட்டம் முழுமையாக ஆராயப்பட்டுஇ அதன் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மற்றும் உலக வங்கிப் பிரதிநிதிகள் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles