அரசியல்தயாசிறி - மைத்ரிக்கு எதிராக தடையுத்தரவு

தயாசிறி – மைத்ரிக்கு எதிராக தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகமவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜா அல உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் சாமலி பெரேராவின் பதவிக்கு வேறொருவர் நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மார்ச் 03 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles