இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் ட்விட்டர் பதிவின்படி, இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்பட்டது.
அண்டை நாடுகளுக்கு முதலில் உதவும் கொள்கையை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.