Friday, April 10, 2026
27.8 C
Colombo
சினிமாநடிகர் மயில்சாமி மறைவு: இறுதி சடங்கு இன்று

நடிகர் மயில்சாமி மறைவு: இறுதி சடங்கு இன்று

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இறுதி ஊர்வலம் சென்றடைந்த பிறகு வடபழனி மின்மயானத்தில் மயில்சாமி உடலுக்கு இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles