தேர்தலை நடத்தப்போவதில்லை என ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் நோக்கில் நகர்வதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலை நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.
ஒரு நாட்டிற்கு சட்டத்தின் ஆட்சி முக்கியமானது எனவும் நிர்வாகத்தை சீர்குலைப்பதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெறாத இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தலை நடத்தாமல் அரசியலமைப்பை மீறும் ஜனநாயக விரோத அமைப்பை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு மே மாதத் தேர்தலுக்கான அச்சடிப்புச் செலவு, தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஒகஸ்ட் 12ஆம் திகதி அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்டது.
2015 ஓகஸ்ட் பொதுத் தேர்தலுக்கான செலவினங்களுக்காக அரசாங்க அச்சகத்துக்கு அந்த வருடம் ஒக்டோபரில் பணம் வழங்கப்பட்ட அதேவேளை 2019 ஜனாதிபதித் தேர்தல் கொடுப்பனவுகள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அச்சிடுவதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் இருந்தும், முன்கூட்டியே பணம் செலுத்தாமல் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என அறிவிப்பது, தேர்தலை ஒத்திவைக்க தடைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட தந்திரம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.