நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் படத்தின் இந்தி பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
பீஸ்ட் படம் இந்தியில் ‘ரா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.