நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காக இன்று (25) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்.
உயர் நீதிமன்றில் முன்வைத்த இரண்டாவது வழக்கில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன்படி, உயர் நீதிமன்றத்தை சிங்கள மொழியில் அவமதித்திருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு நான்கரை ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.