எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் மாத்திரம் காணப்படுகின்ற பிரச்சினையல்ல, உலகளாவிய நெருக்கடி என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் நகரிலும் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நேற்று (24) பிபிசி செய்தி வெளியிட்டதுடன், மசகு எண்ணெய் உற்பத்தி செய்யாத நாடான இலங்கையினால் அதற்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என அவர் வினவினார்.
இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த போதிலும் மக்கள் எப்பொழுதும் பீதியடையவில்லை எனவும் இம்முறை அமைச்சர்கள் கூட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டமையால் மக்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தேவையில்லாமல் எரிபொருளை தேக்கி வைப்பதே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு பாரிய காரணம் என அவர் வலியுறுத்தினார்.
பீப்பாய்களில் மாத்திரமன்றி சிலர் தண்ணீர் பவுசர்களுக்கும் எரிபொருள் நிரப்பிக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.