நடிகர் விஜய் சேதுபதி சினிமாவை தாண்டி சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
2019ம் ஆண்டு வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கி அதற்கு ஊழியர்களை நியமித்து சம்பளமும் கொடுத்து வந்தார்.
கட்டணமில்லாமல் செயல்படும் இந்த வேலைவாய்ப்பு அமைப்புக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேலை தேடுவோர் மற்றும் வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்தன.
தற்போதுவரை இந்த வேலை வாய்ப்பு சேவை இயக்கம் மூலம் ஒரு இலட்சத்து 133 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயன் அடைந்து இருப்பதாக விஜய் சேதுபதி தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பு 73 சுய தொழில் முனைவோரை உருவாக்கியதுடன் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி உள்ளது. 17 வேலை வாய்ப்பு முகாம்களை தனியாகவும்இ 3 முகாம்களை அரசுடன் இணைந்தும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.