நிதி விடயங்களை கையாண்டு தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருக்கிறது. அது ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிய நிதியமைச்சரோ, மத்திய வங்கி ஆளுநரோ எந்த விடயத்தையும் தெரிவிக்கவில்லை.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றம் இந்த வாழைப்பூவுக்காக (சிங்களத்தில் கெஹெல் மல) இருக்கிறது? என அவர் இன்று (24) சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.