Friday, September 19, 2025
26.1 C
Colombo
சினிமாபழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரான கே.விஸ்வநாத் காலமானார்.

தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் கே. விஸ்வநாத்.

இயக்குநராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது முழுப்பெயர் காசிநாதுனி விஸ்வநாத் ஆகும்.

இவர் இயக்கிய சங்கராபரணம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பல விருதுகளை வாங்கிக் குவித்தது.

இந்த நிலையில், 92 வயதான கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

கே.விஸ்வநாத் பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles