கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்காக வைக்கப்பட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாததால் நாடு 2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் புதன் (23) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்தியாவில் உள்ள மூன்று மாநிலங்கள் கஞ்சா ஏற்றுமதி செய்ய சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் இன்று எமது நாடு இவ்வாறானதொரு நிலைமையில் இருக்கும் போது, நான் இந்த யோசனையை முன்வைத்த நாள் முதல் அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் வருடாந்தம் 2 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் நமது நாடு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.