மக்களை ஒடுக்கும் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக வெளியேற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
74 ஆண்டு கால சாபத்திற்கு முடிவு கட்டுவோம், அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தலைப்பிலான கண்டன பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமக்கு முன்னால் இருப்பது தொடர்ந்தும் கட்சி ரீதியாக ஒருவரையொருவர் பிரித்து வெறுப்பைக் கட்டியெழுப்பக்கூடிய நாடு அல்ல.
நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய நாட்டை உருவாக்குவதற்கு அணிதிரள வேண்டும்.
பலகோடி ரூபாய்களை கொள்ளையடித்து வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ள ராஜபக்ஷவினரை விரட்டியடிக்க வேண்டும் என்றார்.