தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
89 வயதான அவர் சுகவீனமடைந்த நிலையில் நேற்று வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
