Thursday, January 16, 2025
24.2 C
Colombo
அரசியல்சர்வ கட்சி மாநாடு: ரணில் முன்வைத்த முக்கிய கருத்துகள்

சர்வ கட்சி மாநாடு: ரணில் முன்வைத்த முக்கிய கருத்துகள்

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு இடம்பெற்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த முக்கியமான விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி ஐந்து வருடங்களுக்கு தொடரும் என்ற அச்சம் இருக்கிறது.
  • தற்போது இலங்கைக்கு இரண்டு பெரும் சவால்கள் உள்ளன. 1) அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது, 2) பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது.
  • இந்த விடயத்தில் நாடாளுமன்றம் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வர வேண்டும்.
  • நெருக்கடி நிலையை போக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள எந்த அர்ப்பணிப்பான நடவடிக்கைகளையும் காண முடியவில்லை.
  • சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்கவில்லை.
  • புதிய வரவு செலவுத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டம் தற்போது ஏற்புடையது அல்ல.
  • புதிய வரவு செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய விடயங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
  • மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
  • சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை 6 மாதங்கள் வரையில் நீடிக்கலாம்.
  • இந்தியாவிடம் இருந்து கிடைத்த உதவிகள் மே மாதம் 2 வாரங்களுக்குள் தீர்ந்துவிடும்.
  • சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில் 6 மாதங்களுக்கு அரசாங்கத்திற்கு மேலதிக நிதி தேவை.
  • தற்போது இருப்பது ஒரேயொரு மாற்றுவழி மட்டுமே – அது, உதவி கோரும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் ஒத்துழைப்பு கோருவதுதான்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles