ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.
சர்வகட்சி மாநாடு என்று குறிப்பிட்ட போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.