பீல்ட் மார்ஷல் பதவியைக் கேட்டு சரத் பொன்சேகா, தன்னிடம் கெஞ்சியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
200,000 இற்கும் அதிகமான இராணுவத்தைக் கட்டுப்படுத்திய இராணுவத் தளபதி ஒருவருக்கே பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்படுவதாகவும், சரத் பொன்சேகாவிடம் இருந்து தப்பிக்க முடியாத நிலையிலேயே அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனது இராணுவத் தலைமையகத்திற்கு வந்த எதிரிகளால் தாக்கப்பட்டு வைத்தியர்களால் உயிர் பிழைத்த சரத் பொன்சேகாவிற்கு தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு உரிமையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா நாட்டின் தலைமையகத்தை மாத்திரமன்றி தனது உடலையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கத் தவறிவிட்டார்.
ஆனால் தாம் சஹ்ரான் உட்பட கும்பலை மூன்று வாரங்களுக்குள் அழித்தொழித்ததாக அவர் வலியுறுத்தினார்.
சரத் பொன்சேகா நேற்று (18) நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மைத்ரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.