ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் பலியானார்.
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான காயத்ரி என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
கடந்த 18ஆம் திகதி ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவரும் மது போதையில் இருந்ததாகவும், கார் கட்டுப்பாட்டை மீறி சாலையில் பயணித்த பெண் மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த பெண் மற்றும் நடிகை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், நடிகையின் நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.