கிராமிய வீதிகள் மற்றும் இதர உட்கட்டுமானத்துறை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது அமைச்சின் செயலாளருக்கும் அவருக்கும் இடையில் கடந்த காலங்களில் முரண்பாடுகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.