சஜித் பிரேமதாசவின் அரசியல் காலாவதியானது எனவும், இதன் காரணமாக அவருடன் இணைந்து அரசியல் செய்வதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை அரசியலில் ஈடுபட்டதால், மகனும் அரசியல் செய்ய முடியாது.
அத்துடன், நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும் போது, மக்கள் விடுதலை முன்னணி குடும்ப அரசியலின்றி கொள்கைகளுடன் செயற்படுவதாகவும், நாடு தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வை வழங்க முடியாது எனவும் பாட்டலி எம்.பி தெரிவித்தார்.