Monday, November 18, 2024
25 C
Colombo
அரசியல்அரகலயவை அழிக்கவே ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம் - சனத் நிஷாந்த

அரகலயவை அழிக்கவே ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம் – சனத் நிஷாந்த

‘அரகலய’ மக்கள் இயக்கத்தை அழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கருவியாக கொண்டு வரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’க்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அரகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம்.

நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க நாம் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதம்.

ஒரு நபர் ஒரு வெடிமருந்து அல்லது துப்பாக்கியை வைத்திருப்பது அதைக் கவனிப்பதற்காக அல்ல. அவசரகாலத்தில் அதைப் பயன்படுத்துவதற்காக.

அதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவை வைத்து செய்தோம். ‘அரகலய’ வை முடிவுக்கு கொண்டு வர அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles