பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என தெரியவந்துள்ளது.
இந்த தகவலை சுஷாந்தின் மரண விசாரணை ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுஷாந்த் சிங் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதியன்று மும்பையில் உள்ள தனது வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கழுத்தில் காயங்கள் காணப்பட்டதுடன், இது தற்கொலை அல்ல கொலையாக இருக்கலாம் என சந்தேகம் காணப்பட்டது.
இரண்டு வருடங்கள் கடந்தும் இந்த மரணம் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இந்திய பொலிஸாருக்கு கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
ஏனெனில் இந்த மரணம் குறித்து உளவுத்துறை விபரங்களை வழங்க தவறியது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனையை நடத்திய ருப்குமார் ஷா, அக்காலப்பகுதியில் உயர் அதிகாரிகளpன் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டிய நிலை காணப்பட்டதாக கூறினார்.
சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, அது தற்கொலையல்ல, கொலை என்று உறுதியாக உணர்ந்ததாக ருப்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
சுஷாந்தின் மரணம் குறித்து இந்திய ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.