Thursday, May 22, 2025
29 C
Colombo
சினிமாநடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்

நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்

தெலுங்கில் பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணா இன்று காலை காலமானார்.

86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ல் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா. அதில் வரும் சின்ன கல்லு பெத்த லாபம் என்ற வசனம் பிரபலம்.

பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சத்யநாராயணா தனது 60 ஆண்டுகால வாழ்க்கையில் வில்லன்இ குணச்சித்திரக் கலைஞர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles