விஷ்ணு விஷால் நடித்த ’எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘மோகன்தாஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது
இந்த டீசரில் சிங்கம் – புலி, சிறுத்தை -நரி கதையை விஷ்ணுவிஷால் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.
எப்.ஐ.ஆர் திரைப்படத்தில் ஒருநாட்டுப்பற்றுள்ள முஸ்லீம் இளைஞராக விஷ்ணு விஷால் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் அவர் ஒரு வில்லத்தனமான கொலைகாரனாக நடித்திருப்பது போன்று காட்சிகள் டீசரில் உள்ளன.
இந்த படம் விஷ்ணு விஷாலின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாறன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் முரளி கார்த்திக் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையில், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.