இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ,இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி உள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அண்மையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின.
இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள “ஜோலியோ ஜிம்கானா” எனும் பாடல் சனிக்கிழமையன்று வெளியாகவுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தில் ஏற்கனவே “அரபிக்குத்து” பாடல் வெளியான நிலையில் , தற்போது இரண்டாவது பாடலாக “ஜோலியோ ஜிம்கானா” வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.