Sunday, May 31, 2026
28.4 C
Colombo
சினிமாஇயக்குநர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

இயக்குநர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயனாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் சில படங்களை சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.

இவரது தயாரிப்பில் வந்த ‘கனா’ படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்தும் இருந்தார்.

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.

தற்போது இந்த படத்தை சிவகார்த்திகேயனே இயக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் அளித்துள்ள பேட்டியில், ‘எனது வாழ்க்கை கதை திரைப்படமாக தயாராக உள்ளது. அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதுமட்டுமன்றி அந்த படத்தை சிவகார்த்திகேயனே அயகடகவுதட செய்ய உள்ளார்’ என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles