சூப்பர் மேன் ஆக இனி நடிக்க மாட்டேன் என பிரிட்டிஷ் நடிகர் ஹென்ரி கெவில் அறிவித்துள்ளார்.
அவர் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஒக்டோபரில் ஹென்ரி கெவில், Man of Steel படத்தின் நாயகனாக நடிக்கப் இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
டுவைன் ஜொன்சன் நடித்த DC திரைப்படமான ‘பிளாக் ஆடம்’ முடிவில் ஒரு காட்சியில் ஹென்ரி கெவில் சூப்பர்மேனாக சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது,
இயக்குநர் ஜேம்ஸ் கன் மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் பீட்டர் சஃப்ரான் ஆகியோரை சந்தித்தேன். ஒக்டோபரில் அவர்கள் DC ஸ்டுடியோவின் இணைத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
நான் சூப்பர் மேனாக இனி நடிக்க மாட்டேன். ஒக்டோபரில் நான் நடிக்கப் போவதாக ஸ்டுடியோவினால் அறிவிக்கப்பட்டது. எனினும் காலம் மாறுவதை போல சில விடயங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.இந்தச் செய்தி எளிதானது அல்ல. ஆனால் அதுதான் வாழ்க்கை. நான் அதை மதிக்கிறேன்.’
நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்காவிடினும், ‘சூப்பர் மேன் இன்னும் இருக்கிறார்’.
சூப்பர் மேனாக நடிப்பதற்கான எனது முறை கடந்துவிட்டது. இந்த காலப்பகுதிக்குள் சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் ஊடாக எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்’