Sunday, December 21, 2025
24.5 C
Colombo
சினிமாஇனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை ‘கிடாரி’ படம் மூலம் கவனம் ஈர்த்த முருகன் பிரசாத் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது . 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

அவரது நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படமே கடைசி படமாக வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles