நடிகை சமந்தா நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கர்நாடக பாடகி நாகரத்தினம்மா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிப்பதற்காக முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த படத்தில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் கன்னடத்தில் தயாரானாலும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.