தனியார் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் நாளாந்த வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதனை 50 சதவீதமாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கு தினசரி வருமானத்தில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறதுஇ
இது தவிர, குறுகிய தூர பஸ்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 3,500 ரூபா முதல் 4,00 ரூபா வரை செலவிடப்படுகிறது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.