நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளமாக நிதி அமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
“நான் அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லவில்லை. அத்துடன் அமைச்சின் நடவடிக்கைகளில் பங்கேற்க போவதுமில்லை. இன்னும் நான் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்படாததால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று கூற முடியாது. நான் பதவி விலகுவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த இருவரின் பதவி நீக்கத்தை என்னால் காரணமாக கூற முடியாது. இந்த கலந்துரையாடலில் மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நெருக்கடிக்கு பசில் ராஜபக்ஷவே காரணம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது தான் உண்மை” என அவர் தெரிவித்தார்.